முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணத்தால் தீர்ப்பை பா.ஜனதா திருடுகிறது என்ற ராகுலின் குற்றச்சாட்டுக்கு அருண்ஜெட்லி பதிலடி

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - பணத்தால் மக்களின் தீர்ப்பை பா.ஜனதா திருடுகிறது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண்ஜெட்லி பதிலடி கொடுத்து உள்ளார்.

 சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மணிப்பூரில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றும், கோவாவில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றும் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. இருப்பினும் இரு மாநிலங்களிலும் இதர கட்சிகளின் உதவியுடன் இப்போது பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது. கோவா விவகாரத்தை காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டு எடுத்து சென்றது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

ராகுல் குற்றச்சாட்டு
ராகுல் காந்தி, கோவா மற்றும் மணிப்பூரில் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்று உள்ளது, ஆனால் பா.ஜனதா மக்களின் தீர்ப்பை திருட பணத்தை வீசுகிறது என குற்றம் சாட்டிஉள்ளார். நாங்கள் பாரதீய ஜனதாவின் சித்தாந்தத்திற்கு எதிராகவே போராடி வருகிறோம், கோவா மற்றும் மணிப்பூரில் அவர்கள் என்ன செய்தார்களோ அதுதான் அவர்களுடைய கொள்கையாகும், நாங்கள் அதற்கு எதிராக போராடி வருகிறோம் என்றார்.

அருண்ஜெட்லி பதிலடி
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து உள்ள பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அருண்ஜெட்லி, கோவா மாநிலத்தில் முடிவுறாததாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அங்கு ஒரு தொங்கு சட்டசபை எழுந்து உள்ளது. தேர்தல் முடிந்த பின்னர் நாங்கள் கூட்டணியை அமைத்து உள்ளோம். காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டானது மிகவும் அதிகமானது. கோவாவில் மக்களின் தீர்ப்பை பா.ஜனதா திருடிவிட்டதாக காங்கிரஸ் கூறுகிறது.

கவர்னர் அழைப்பு
சுப்ரீம் கோர்ட்டு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலும் தோல்வி அடைந்துவிட்டது. 40 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட கோவாவில் 21 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளவரையே கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும், எனவே மனோகர் பாரிக்கரை ஆட்சி அமைக்க அழைத்து உள்ளார். 17 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கூட கோரவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்