முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா 15 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம், - தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயிலாகும்.  இக்கோயிலில் நடைபெ-றும் திருவிழாக்களில் மாசிப் பெருந்திருவிழா தனி சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழா கடந்த மாதம் 27ந்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் காலையில் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில்ப க்தர்கள் புனித நீராடி வந்து தீர்த்தக் குடங்களுடன் நத்தம் மாரியம்மன் கோயிலில் வந்து காப்பு கட்டி 15 நாள் விரதம்  இருந்தனர். இதை தொடர்ந்து வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் மாரியம்மன்எ ழுந்தருளி மின்ரதத்தில் நகர்வலம் வந்தார். விழா நாட்களில் பக்தர்கள் கரும்புதொட்டில் சுமத்தல், மாவிளக்கு எடுத்தல்,  அங்க பிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் செய்து அம்மனை தரிசனம் செய்தனர்.   
                      நேற்று முன்தினம் அம்மனுக்கு மஞ்சள் பாவாடை எடுத்து வரப்பட்டது. அதை
தொடர்ந்து அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடிகள் எடுத்து வரப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  பூக்குழி திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் அதிகாலையிலிருந்து பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்நடந்தது. தொடர்ந்து காலையில் கோயில் முன்பாக கழுமரம் நடப்பட்டது. அதை தொடர்ந்து கழுமரம் ஏறப்பட்டது. இதை ஆயிரக்க ணக்கானோர் பார்த்து மெய் சிலிர்க்க கோவிந்தா கோஷமிட்டு கை குவித்து வணங்கினர். பின்னர் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.  இதில் சிறுவர், சிறுமியர், முதியவர், பெண்கள்,
உள்ளிட்ட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கினர். பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மாலையிலிருந்து இரவு வரை நீடித்தது. இதில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், சென்னை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்றிரவு கம்பம் கொண்டு போய் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டது.  இன்று அம்பாள் மஞ்சள் நீராடுதல் நடைபெறும் தொடர்ந்து இரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில்
அம்மன் குளத்திலிருந்து எழுந்தருளி நகர்வலம் வந்து கோயிலை சென்றடையும். இத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
                       விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள், திருக்கோயில் பூசாரிகள் மற்றும் விழாக்
குழுவினரும், பொதுசுகாதாரம், குடிதண்ணீர் வசதிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகத்தினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை
மாவட்ட காவல்துறை உத்தரவின் பேரில்  நத்தம் போலீசார் உள்பட 500க்கும் மேற்பட்டோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்