கடலூர் மாவட்டத்தில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி கலெக்டர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      கடலூர்

கடலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆவணங்களின்படி 0 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் புகைப்படம் எடுத்தல், ஆதார் அட்டை பதிவு செய்யப்பட வேண்டியவர்களின் மொத்த எண்ணிக்கை 2,12,001 ஆகும். 0 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் புகைப்படம் எடுத்து அவர்களின் விபரங்களை ஆதார் அட்டையில் பதிவு செய்திட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் இப்புகைப்படம் எடுக்கும் பணி 15-03-2017 முதல் தொடங்கி31-03-2017 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.இதன்படி முதற்கட்டமாக கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், காடடுமன்னார்கோயில் வட்டங்களில் நடைபெற உள்ளது. இதர வட்டங்களிலும் இப்பணி நடைபெற உள்ளது. 0 முதல் 5 வயதுடைய குழந்தைகளின் புகைப்படம் எடுக்க உள்ள இடம், நாள் குறித்து நகராட்சி ஆணையர்கள் மூலம் ஒலிபெருக்கி மற்றும் டாம் டாம் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இதே போன்று கிராமப் பகுதிகளில் நடைபெறுவதை அந்தந்த வட்டாட்சியர்கள் மூலம் உள்@ர் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், உள்@ர் தொலைக்காட்சியின் மூலமும் விளம்பரம் செய்யப்படும்.கிராம புறங்களில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களில் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும். ஏதேனும் ஒரு மையத்தில் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறும் நிலையில் அருகில் உள்ள கிராம பொதுமக்களும் குழந்தைகளை அழைத்து வந்து புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம். தாய் அல்லது தந்தை கட்டாயம் குழந்தைகளுடன் வரவேண்டும்.5-வயதுக்குட்பட்ட குழந்தைகளை புகைப்படம் எடுக்க குழந்தைகளின் பிறப்பு சான்று கட்டாயம் மற்றும் குடும்ப அட்டை, பாஸ்போர்ட், மாநில அரசால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, இராணுவத்தினருக்கான கேண்டீன் அட்டை, மத்தியஃமாநில அரசால் வழங்கப்பட்ட தகுதி உடையது என வழங்கப்பட்ட ஆவணம் இவைகளில் ஏதேனும் ஒன்றும், தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டையுடன் கொண்டு வருதல் வேண்டும்.மேலும், 0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுடைய குழந்தைகளை புகைப்படம் எடுத்து ஆதாருடன் பதிவினை மேற்கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: