முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.கவின் உத்தரபிரதேச வெற்றியால் உச்சத்தை தொட்ட ‘நிஃப்டி’குறியீடு !

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      வர்த்தகம்
Image Unavailable

மும்பை  - உத்திரபிரதேச சட்டபேரவை பிரதமர் மோடி பெற்ற பிரம்மாண்ட வெற்றியினால் நேற்று ‘நிஃப்டி’ குறியீடு 9,123 புள்ளிகளைத் தொட்டது.

2.7 சதவீதம் அதிகரிப்பு
உத்திரபிரதேசம், உத்திரகாண்ட்டில்  பாஜகவின் வரலாற்று வெற்றியால் பங்குச் சந்தையை பேரளவில் ஊக்குவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் நிஃப்டி என்றும் இல்லாத அளவிற்கு உயர்ந்து 9,123 புள்ளிகளைத் தொட்டது. இன்று பங்குச் சந்தை துவங்கியதும் ஏராளமான முதலீடுகள் குவிந்ததால் இன்று காலையிலேயே 616 புள்ளிகள் எகிறின. இந்த ஏற்றம் தொழில்துறை உற்பத்திக் குறியீடு ஏற்றமடையும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலானது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இக்குறியீடு ஜனவரியில் 2.7 சதவீதம் அதிகரித்தது.

புதிய சாதனை
இதரத் துறைகளான வங்கி, மூலதன பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியன 2.20 புள்ளிகள் அதிகரித்து சாதகமான சூழலுடன் உள்ளன. ஐம்பது பங்குகளை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படும் நிஃப்டி இதற்கு முன்னரான மார்ச் 4, 2015 உச்ச அளவான 9,119.20 ஐ விட நேற்று 188.20 அல்லது 2.10 சதவீதம் அதிகரித்து புதிய சாதனை அளவான 9,122.75 ஐ எட்டியுள்ளது.

சென்சக்சும் உயர்ந்தது
இதேபோல 30 பங்குகளைக் கொண்டு அளவிடப்படும் சென்சக்ஸ் 615.70 அல்லது 2.12 சவீதம் உயர்ந்து 29,561.93 என்ற அளவில் நிலைத்தது. இது மார்ச் 4, 2015 அன்று காணப்பட்ட அளவாகும். கடந்த இரு வர்த்தகங்களில் இந்தக் குறியீடு 44.29 கூடுதலாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பங்குச் சந்தைக்கு விடுமுறையளிக்கப்பட்டது. தேர்தல் வெற்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை வாங்குவதற்கு உதவியது. பொருளாதார சீர்திருத்தங்கள் தேர்தல் வெற்றியால் முன்னெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பே இதன் பின்னணியில் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago