முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீண்ட காலம் இழுபறியாக இருந்த எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - நீண்ட காலம் இழுபறியாக இருந்த எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா, இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசரச் சட்டம்
இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் சொத்துகள் எதிரி சொத்துகள் என்று நிர்ணயிக்கப்பட்டு எதிரி சொத்து சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சொத்துகளை அவற்றை நிர்வகித்து வருபவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.

நிறைவேறுவதில் இழுபறி
அதேசமயம், அதனை நிரந்தர சட்டமாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் அதில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வந்ததால் நிறைவேறுவதில் இழுபறி ஏற்பட்டது. எனவே, எதிரி சொத்து அவசர சட்டம் தொடர்ந்து மறுபிரகடனம் செய்யப்பட்டு வந்தது.

மீண்டும் மசோதா தாக்கல்
எதிரி சொத்து சட்ட மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சில திருத்தங்களுடன் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநிலங்களவையில் இருந்து இறுதி ஒப்புதலுக்காக மீண்டும் மக்களவைக்கு அந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

மசோதா நிறைவேற்றம்
இந்நிலையில், எதிரி சொத்து அவசர சட்டம் நேற்றுடன் காலாவதியாவதை முன்னிட்டு, நேற்று பிற்பகல் மக்களவையில் எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தற்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்ததும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago