முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரதட்சணைதடுப்புசட்டம்,குடும்பவன்முறையிலிருந்துபெண்களைபாதுகாக்கும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      திருவாரூர்
Image Unavailable

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பெண்கள் கல்லூரியில் சமூக நலத் துறை மற்றும் சமூக பாதுகாப்புத் துறை இணைந்து வரதட்சணை தடுப்பு சட்டம்,குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் கல்லூரி மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பெண்கள் கல்லூரி முதல்வர் டாக்டர்.இராமநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.கோ.புணுபகலா மாவட்ட சமூகநல அலுவலர்,ஆர்.அருணோதயா மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,முத்தமிழ்செல்வி பாதுகாப்பு அலுவலர்,எம்.அமுதா பாதுகாப்பு அலுவலர் (குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005),ஜெ.ஜீலியட் சித்ரா பாரதி குடும்ப ஆலோசனை மையம் திருவாரூர்,சமூக நலவிரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஊர்நல அலுவலர்கள் (மகளிர்)மற்றும் 200 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். விழிப்புணர்பு முகாமில் தமிழரசி அங்கன்வாடி பணியாளர் தலைமையில் 7 கல்லூரி மாணவிகள் கொண்ட குழு மூலம் பெண்கள் முன்னேற்றத்தில் பாரதி கண்ட கனவு நனவானதா? இல்லையா? என்ற தலைப்பின் கீழ்பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும் தற்போது பெண்களின் நிலைபற்றிய பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. அனைவருக்கும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.விழிப்புணர்வு முகாமில் வரதட்சனை தடுப்புசட்டம் 1961 மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 பற்றியவிளக்கம் அளிக்கப்பட்டது. மற்றும் பெண்களக்கானசட்டங்கள் பற்றியமடிப்புத்தாள் மற்றும் துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டது.மேலும் ஒலிரவன் தொண்டு நிறுவனத்திலிருந்து பெண்களுக்கான தற்காப்பு கலைசெயல் முறையுடன் செய்து காண்பிக்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்