முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கந்தவர்கோட்டை வட்டாரத்தில் எண்ணெய் பனை பாமாயில் மர நடவு : கூடுதல் இயக்குனர் கனிங்ஷ்டன் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரத்தில் தேசிய எண்ணெய் வித்து மற்றும் எண்ணெய் பனைப் பெருக்கக் குழுமம் மினி மிஷன் - ஐஐ திட்டத்தின் கீழ் எண்ணெய்ப் பனை பாமாயில் மர நடவு புதுநகர் கிராமத்தில் 2 எக்டேர் பரப்பில் சென்னை வேளாண்மை கூடுதல் இயக்குநர் (ம.அ.தி) கனிங்ஷ்டன் துவக்கி வைத்தார்.

புதுநகர் கிராமம் .ராஜகோபால் வயலில் பாமாயில் மர கன்றுகள் நடவு துவக்கி வைக்கப்பட்ட போது புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் .என். அண்ணாமலை, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர். கிருஷ்ணகுமார், புதுக்கோட்டை,வேளாண்மை துணை இயக்குநர் (மஅ.தி) பெ. கந்தசாமி, கந்தர்வக்கோட்டை,வேளாண்மை உதவி இயக்குநர் மு.சங்கரலட்சுமி, கந்தர்வக்கோட்டை ,வேளாண்மை அலுவலர் பத்மபிரியா, கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவன ஊழியர் பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள தட்பவெப்பநிலை எண்ணெய் பனை சாகுபடி செய்ய மிகவும் ஏற்றது. எண்ணெய்பனை சாகுபடி, குறைவான சாகுபடி செலவில், 25 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் தரக்கூடியது. எண்ணெய்பனை சாகுபடிக்கு நான்கு ஆண்டுகளுக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது. பராமரிப்பு மானியமாக ரூ.4,000ஃ-ம் எக்டேருக்கும், ஊடுபயிர் மானியம் எக்டேருக்கு ரூ.3,000ம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு நடவுக்கு மானியமாக ரூ.8,000ம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கோத்ரெஜ் அக்ரோசெட் நிறுவனத்தினர் மூலம் பாமாயில் பழக்குலைகள் கொள்முதல் செய்யப்படுவதால் சந்தைப் படுத்துதலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் பாமாயில் மர சாகுபடியின் அவசியத்தை உணர்ந்து அதிக அளவில் சாகுபடி செய்து வருமானத்தை பெருக்கிடுமாறு கேட்டுக் கொண்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்