முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் ரூ.38.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலப்பணிகளை கலெக்டர் ஆண்ணாதுரை ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் ரூ.38.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (14.03.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

பாலப்பணிகளை ஆய்வு செய்து மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்ததாவது,

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பெரிய கோவில் எதிர்புறமும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மாற்று வழி ஏற்படுத்துவதற்காக புதிய பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், தஞ்சாவூர் வருகின்ற சுற்றுலா பயணிகளையும், பொது மக்கள் பொழுபோக்கிற்காகவும், அகழி பகுதியை சுத்தம் செய்து படகு சவாரி மேற்கொள்ள ஏதுவாகவும், தஞ்சாவூர் மாநகராட்சி உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாநகராட்சியின் ஜி.ஏ.கேனல் மற்றும் அகழி பகுதியில் 10 இடங்களில் இணைப்பு பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

தற்போது 6 பாலங்களான அகழியின் குறுக்கே வடக்கு பகுதியில் 1,100 கி.மீ. புதிய பாலமும், அகழியின் குறுக்கே மேற்கு பகுதியில் 0,19 கி.மீ. புதிய பாலமும், அகழியின் குறுக்கே சீனிவாசபுரம் 0,298 கி.மீ. புதிய பாலமும், அகழியின் குறுக்கே கிழக்கு பகுதியில் 3,300 கி.மீ. புதிய பாலமும், அகழியின் குறுக்கே மேற்கு பகுதியில் 0,0 கி.மீ. புதிய பாலமும், கல்லணை கால்வாய் குறுக்கே பெரிய கோவில் எதிரே புதிய பாலங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றது. மீதி நான்கு பாலங்களான அகழியின் குறுக்கே வடக்கு பகுதியில் 1,520 கி.மீ. புதிய பாலமும், அகழியின் குறுக்கு வடக்கு பகுதியில் 1,900 கி.மீ. புதிய பாலமும், அகழியின் குறுக்கே கிழக்கு பகுதிகளில் 2,930 கி.மீ, அகழியின் குறுக்கே கிழக்கு பகுதியில் 2,320 கி.மீ. இப்பாலப்பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும்.

தற்போது தஞ்சாவூர் பெரிய கோவில் அருகில் ஜி.ஏ.கேனல் கட்டப்பட்டு வரும் இணைப்பு பாலத்தினை பிரதான சாலையில் இணைத்திடவும், இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் போக்குவரத்தை மாற்றியமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பாலங்கள் அனைத்து ரூ.38.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது. பணிகள் அனைத்து போர்க்கால அடிப்படையில் துரிதமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வரதராஜன், போக்குவரத்து கழக பொது மேலாளர் சதீஷ்குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார், உதவி நகரமைப்பு அலுவலர், உதவி பொறியாளர், வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்