முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் வீடுகளின் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும்: ஆணையர் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      ஈரோடு

வீடுகளில் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும் என்று ஈரோடு மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்தி:

வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து நீர்வரத்து குறைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

  காவிரி குடிநீர், உள்ளூர் குடிநீர் ஆகியவற்றை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். வீட்டு இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சினால் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும். பொது குழாய்கள், சின்டெக்ஸ் தொட்டி ஆகியவற்றில் இருந்து முறைகேடாக குழாய் மூலமாகத் தண்ணீர் எடுக்கக் கூடாது.

  பொது குழாய்கள், சின்டெக்ஸ் தொட்டி ஆகியற்றின் அருகில் துணி துவைத்தல், வாகனம் கழுவுதல், கால்நடைகளை குளிப்பாட்டுதல் போன்றவற்றுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கும் வரை தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். வீட்டு குடிநீர் இணைப்புகளில் ஏற்படும் கசிவு, பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்து குடிநீரை வீணாக்காமல் பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்