முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணி :கலெக்டர் கோவிந்தராஜ், நீதிபதி ஹேமலதா நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டத்தில், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சீமை கருவேல் மரங்கள் முற்றிலும் அழித்திடும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் மேம்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், முதன்மை மாவட்ட நீதியரசர் ஆர்.ஹேமலதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டத்தில் முக்கிய நீராதாரங்களான குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் ஆகியவற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல் மரங்களை முற்றிலும் வேருடன் அகற்றி நீராதாரங்களை மேம்படுத்தும் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. மாவட்டத்திலுள்ள தாதம்பாளையம், வெள்ளியணை, உப்பிடமங்கலம், வீரராக்கியம், பஞ்சப்பட்டி உள்ளிட்ட ஏரிகள், அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல் மரங்கள் அரசு மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி வெள்ளியணை, உப்பிடமங்கலம், வீரராக்கியம் ஏரிகளில் சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், மாண்பமை முதன்மை மாவட்ட நீதியரசர் ஆர்.ஹேமலதா அவர்களுடன் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வின் போது, கோட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியம், சக்திவேல், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் துரைராஜ், வட்டாட்சியர்கள் துரைசாமி, முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், பொதுப்பணித்துறையைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago