முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத்திலுள்ள மர்காஷpயஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஐ அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியின் 21 வது கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இறை வணக்கப் பாடலை பாலிடெக்னிக் கல்லூரி பாடல் குழுவினர் பாடினர். முதலாம் ஆண்டு துறைத் தலைவர் சோபியா வேதபாடம் வாசித்தார். தூய யோவான் பேராலய தலைமை போதகர் அருட்திரு. தேவசகாயம் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி தாளாளரும் மற்றும் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல கல்லூரிகளுக்கான நிர்வாக குழு செயலாளருமான ஜெபச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் முதல்வர் கோயில்ராஐ ஞானதாசன் கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார்;. தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல பிரதம பேராய ஆனணயாளர் ஜெசு சகாயம் தலைமை ஏற்று தலைமை உரை நிகழ்த்தினா ‘லே செயலர்’ ராஜன் முன்னிலை வகித்து, மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணைகள் வழங்கினார். தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தின் உறுப்பினர் செயலர் சீனிவாசன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். முன்னாள் பழைய மாணவர் டேவிட் ஜாண் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜெயசீலன் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தேர்வில் ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்க நாணயம் வழங்கி கௌரவித்தார். தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் உபதலைவர் அருட்திரு. லூர்துராஐ ஜெயசிங், குருத்துவ காரியதரிசி அருட்திரு. தேவராஐ; ஞானசிங் வாழ்த்துரை வழங்கினர். விளையாட்டு போட்டிகளில் முதன்மையாக வந்த மாணவ மாணவிகளை சிறப்பு விருந்தினர்கள் கௌரவித்து பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியை இயந்திரவியல் துறைத் தலைவர் திரு. கிருபாகரன் ஜோசப், எல்க்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர் பெனிட்டாராஐ; தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில்; சபை மன்ற தலைவர்கள் அருட்திரு. குரோவ்ஸ் பர்னபாஸ், அருட்திரு. ஆண்ட்ரூஸ் நவராஐ, மற்றும் மேம்பட்ட பயிற்சி மைய தாளாளர் ஜாண்சன், புனித லூக்கா செவிலியர் கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன், புனித யோவான் மகளிர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாந்தகுமாரி, சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கிருபாகரன், ஜெயராஐ; அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியற் கல்லூரி தாளாளர் சசிகரன், முதல்வர் ஜெயக்குமா; காதுகேளாதோர் பள்ளி தாளாளர் பாதபிச்சை, நிர்வாக குழு உறுப்பினர்கள் எட்வர்ட், திரு. குணசீலன், கல்லூரி ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள் மாமல்லன், ஆண்ட்ருஸ், ஆனந்தராஐ;, பாஸ்ட்ரேட் கமிட்டி உறுப்பினர்கள் புஷ;பராஐ,; பவுளி ஜேசுதாஸ், முன்னாள் முதல்வர் சாமுவேல் தியோடர், நைஸ் பப்ளிக்கேஷன்ஸ் சதாசிவம் மற்றும் சினாட் உறுப்பினர் ஜெபஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். வாரியத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற கணணி துறை மாணவி நிவேதாவிற்கு பொறியியற் மேற்படிப்பில் ஜெயராஐ; அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் இலவசமாக படிப்பதற்கு ஆணை வழங்கப்பட்டது. மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லூரி பர்சார் முத்துசந்திரசேகர் நன்றியுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் நிறைவு ஜெபம் செய்து, நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதில் மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜெபச்சந்திரன் தலைமையில், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்