முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டப்பிடாரம் ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி: அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை கலெக்டர் எம்.ரவி குமார்; தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்து பார்வையிட்டார்இக்கண்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர். செ.ராஜூ திறந்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்களை அனைத்துத்தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இப்புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படக்கண்காட்சியில் ஒவ்வொரு துறைகள் மூலம் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை போன்ற 30-க்கும் மேற்பட்ட துறைகளின் சார்பில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள், நலத்திட்ட உதவிகள் இடம் பெற்றுள்ளது. இப்புகைப்படக்கண்காட்சியின் நோக்கமானது அரசு அறிவிக்கின்ற அனைத்து திட்டங்களையும், அனைத்து தரப்பு மக்களும் அறிந்து அனைவரும் பயன் அடைய வேண்டும் என்பதே ஆகும். இவ்வாறு தெரிவித்தார்.இக்கண்காட்சியில் நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜகோபால், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, மகளிர் திட்ட இயக்குநர் இந்துபாலா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன், மாவட்ட திட்ட மேலாளர் (புதுவாழ்வு திட்டம்) கர்ணன், தாட்கோ மேலாளர் யுவராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்-ஊரகவளர்ச்சி) மைக்கேல், ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் வாசுகி, மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன,; தூத்துக்குடி வட்டாச்சியர் சங்கரநாராயணன்;, உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்