முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் 3 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்களை நடத்திய அதிபயங்கர தீவிரவாதிகள் மூன்று பேர் நேற்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.

ஆர்வலர்கள் கோரிக்கை
பாகிஸ்தான் சிறைகளில் சுமார் 8 ஆயிரம் கைதிகள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதற்கிடையில், மரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை. உலகின் பல நாடுகள் இந்த மரண தண்டனையை ஒழித்துவிட்ட நிலையில் பாகிஸ்தானும் இது தொடர்பாக மறுஆய்வு செய்ய வேண்டும் என அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்பினர்.

3 பேருக்கு நிறைவேற்றம்
ஆனால், தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக தேங்கி கிடந்த வழக்குகளை விசாரிப்பதற்கென்றே அவசர சட்டத்தின் மூலம் சிறப்பு கோர்ட்டுகள் உருவாக்கப்பட்டன. தீவிரவாதம் மற்றும் தேசத்துரோக வழக்குகளில் தொடர்புடைய சிலர் அடுத்தடுத்து தூக்கிலிட்டு கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போலீசார் மீது தீவிரவாத தாக்குதல்களை நடத்திய மூன்று பேர் நேற்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.

தலிபான் இயக்கத்தினர் ...
பஞ்சாப் மாகாணம், சஹிவால் மாவட்டத்தில் உள்ள உயர் பாதுகாப்பு மிக்க சிறையில் நேற்று தூக்கிலிட்டு கொல்லப்பட்ட மூவரும் தலிபான் இயக்கத்துடன் தொடர்புடைய ஹர்க்கத் உல் ஜிஹாத் இ இஸ்லாமி இயக்கத்தை சேர்ந்த சைத் ஜமான் கான், ஷவாலே மற்றும் முஹம்மது ஜீஷான் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்