பங்குனி மாத பூஜைக்கா நடை திறப்பு: சபரிமலையில் அலைமோதும் கூட்டம்

திருவனந்தபுரம், சபரிமலை சுவாமி ஐயப்பன்கோயிவிலில் ஒவ்வொரு தமிழ்மாதம் முதல் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.
பங்குனி மாதம் பிறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடையை தந்திரி கண்டரரு ராஜீவரு திறந்து வைத்தார். நேற்று சுவாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டு கோவிலை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. மீண்டும் நேற்று அதி காலை 5.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது.
பக்தர்கள் கூட்டம்
நேற்று சபரிமலையில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது. தலையில் இருமுடி சுமந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து சென்றனர். இன்று 16 ம் தேதி முதல் 19 ம் தேதிவரை தினமும் சகஸ்ர கலச பூஜை நடைபெறுகிறது மேலும் சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகமும் நடைபெறும். முக்கிய பூஜையான படிபூஜை, உஜபூஜை போன்றவையும் நடைபெறும். வருகின்ற 19 ம்தேதி இரவு 10.50 மணிக்கு அரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.