முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுமுறை பயணமாக அடுத்த மாதம் இந்தியா வருகிறார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா

புதன்கிழமை, 15 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

டாக்கா  - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஏப்ரல் 7,8,9,10 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மோடியுடன் சந்திப்பு
7-ம் தேதி இந்தியா வரும் ஷேக் ஹசினா, 8-ம் தேதி பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கவிருக்கிறார். சந்திப்பின் போது வங்க தேசம்-இந்தியா இடையிலான நட்புறவினை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டீஸ்டா நதிநீர் பிரச்சினை குறித்து மோடியிடம் ஹசினா பேசுவார் என கூறப்படுகிறது.

பயணம் ஒத்திவைப்பு
முன்னதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஹசினா இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவரின் பயணம் தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக 2010-ம் வருடம் ஹசினா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்