முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான மனு தள்ளுபடி : ஐரோப்பிய யூனியன் கோர்ட்டு உத்தரவு

புதன்கிழமை, 15 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

பிரசல்ஸ்  - விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான மனுவை தள்ளுபடி செய்து ஐரோப்பிய யூனியன் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது

நிதி திரட்டியதாக ...
நெதர்லாந்து நாட்டில் வசித்து வரும் 4 பேர், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களது சொத்துகள் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து அவர்கள் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியனின் உயரிய கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர்.

வழக்கு தள்ளுபடி
அதில், விடுதலைப்புலிகள் இயக்கம் உள்நாட்டு யுத்தத்தில் ஆயுதம் தாங்கி போராடியது என்றும், அதன் செயல்பாடுகளுக்கு ‘பயங்கரவாதம்’ என்ற முத்திரை குத்தக்கூடாது என்றும், சர்வதேச மனிதாபிமான சட்ட அடிப்படையில் அதை அணுக வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர். இந்நிலையில், இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அவர்களின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்