முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவி நீக்கப்பட்ட தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதன்கிழமை, 15 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

சியோல்  - ஊழல் குற்றச்சாட்டால் உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹே நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள்
தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகளவில் சுமத்தப்பட்டது. மேலும் அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தின.

பதவி நீக்கம்
தனது தோழியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த அதிபர் பார்க் கியுன் ஹே, இவ்விவகாரத்தில் மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில், அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் கடந்த ஆண்டில் நடைபெற்றது. இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ஆஜராக நோட்டீஸ்
பாராளுமன்றத்தின் தீர்மானத்தை எதிர்த்து பார்க் கியூன் ஹே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்ட உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, பார்க் கியூன் ஹே-வை பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்தது செல்லும், அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹே வரும் 21-ம் தேதி காலை 9.30 மணியளவில் நேரில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்