முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரிய அதிபரின் சகோதாரர் சடலத்தை டி.என்.ஏ சோதனை மூலம் உறுதிப்படுத்த முடிவு

புதன்கிழமை, 15 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

கோலாலம்பூர்  - வடகொரிய அதிபர் சகோதரர் கிம் ஜாங் நம் கொலை வழக்கில் கொல்லபப்பட்டது அவர்தான் என்பதை கிம் ஜாங்-ன் குழந்தைகள் மூலம் டி.என்.ஏ பரிசோதனை வைத்து நிரூபிக்க இருப்பதாக மலேசிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

படுகொலை
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46), கோலாலம்பூர் விமான நிலையத்தில், ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட ‘விஎக்ஸ்’ என்னும் ரசாயனத்தை பயன்படுத்தி கடந்த மாதம் 13-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், இந்தோனேசிய பெண் சிட்டி ஆயிஷா (25), வியட்நாம் பெண் டொன் தி ஹூவாங் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்படுத்தி ...
கிம் ஜாங் நாம் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியும், இன்னும் அவரது குடும்பத்தினர் யாரும் அவரது உடலை உரிமை கோரவில்லை. அதே நேரத்தில் மலேசிய அரசு, அவரது உடலை உரிமை கோரி வருவார்கள் என காத்திருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் அவரது உடல் கெட்டு விடக்கூடாது என்பதற்காக முறைப்படி பதப்படுத்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்து வந்தது.

டி.என்.ஏ சோதனை
கொல்லப்பட்ட நபரின் பெயர் கிம் சோல் என பாஸ்போர்ட்டில் இருப்பதாகவும், அந்த உடல் கிம் ஜாங் நம்-மின் உடல்தான் என உறுதிப்படுத்தாதவரை சடலத்தை பெறப்போவதில்லை என  வட கொரியா தெரிவித்துவந்தது. இதனால், இரு நாடுக்களுக்கிடையே தொடர்ந்து வார்த்தை மோதல் நிகழ்ந்து வந்தது. இந்நிலையில், கொல்லப்பட்ட நபர் கிம் ஜாங் நம் தான் என்பதை அவரது மகனின் டி.என்.ஏ-வை வைத்து ஒப்பீடு செய்து உறுதிப்படுத்தப்படும் என மலேசிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார். கிம் ஜாங் நம்-ன் மனைவி மற்றும் 21 வயது மகன் தற்போது சீனாவின் மக்காவு மாகாணத்தில் வசித்து வருகின்றனர். எனவே அவர்களை தொடர்பு கொண்டு இந்த சோதனைக்கு ஒத்துழைப்பு கோர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்