முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு விழிப்புணர்வு பேரணி

புதன்கிழமை, 15 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் சீமைக்கருவேல மரங்கள் அழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நீதிபதி கயல்விழி, மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக, மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன்;, மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி ஆகியோர், சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

   சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான பணிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அந்தந்த பகுதிகளில் அதன் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர சீமைக்கருவேல மரங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், முதன்மை மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக,  பொதுமக்களுக்கு சீமைக்கருவேல மரங்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில்; இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துவங்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் , பாரதிநகர், புதிய பேருந்து நிலையம் , அரண்மனை வழியாக சென்று மீண்டும் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவு பெற்றது.  இப்பேரணியில் பொதுமக்களுக்கு கருவேல மரங்களால் உண்டாகும் நச்சுத் தன்மைகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு சீமைக்கருவேல மரங்களினால் உண்டாகும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.ஜெயராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.எஸ்.ராஜேஷ்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் கே.இன்பகார்த்திக், ஏ.கண்ணன், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் துரைமுருகன் உள்பட காவல்துறை அலுவலர்கள், நீதிமன்ற பணியாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்