முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவி படையால் பினராய் விஜயனுக்கு அச்சுறுத்தல் மாநிலங்களவையில் சி.பி.எம் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 15 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக காவி படைகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன என மாநிலங்களவையில் சி.பி.எம் குற்றம் சாட்டி உள்ளது.

அடிக்கடி மோதல்
இடதுசாரிகள் ஆட்சி நடைபெறும் கேரளாவில் இடதுசாரி தொண்டர்கள் மற்றும் பா.ஜனதா - ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.  கேரளாவில் தொடரும் அரசியல் வன்முறையில் பா.ஜனதாவினர், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலை செய்யப்படுவது தொடர் சம்பவமாக நிகழ்ந்து வருகிறது. இதனை கண்டித்து இந்துத்துவா அமைப்புகள் சார்பில் கேரளாவில் போராட்டம் நடைபெற்றது. பிற மாநிலங்களிலும் நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடைபெற்ற போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் சந்த்ராவாத் கேரள முதல்வர் பினராய் விஜயன் தலையை எடுப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

முதல்வருக்கு அச்சுறுத்தல்
மாநிலங்களவையில் இவ்விவகாரத்தை எழுப்பிய கே கே ராகேஷ், பினராஜ் விஜயன் தலைக்கு ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவித்து உள்ளார், காவி படையின் வலியுறுத்தல் காரணமாக போபாலில் பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டாம் என கேரள முதல்வர் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளார். மங்களூருவில் பினராய் விஜயன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள இருந்த போது போராட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியானது அமைதியான முறையில் நடந்தது என்றார்.

குற்றச்சாட்டு
மேலும் பேசுகையில் பிற பகுதிகளில் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் கலந்துக் கொண்ட நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற முயற்சிகள் நடந்து உள்ளன. முதல்வரை ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவிட மாட்டோம் என கூற இவர்கள் யார்? என கேள்வி எழுப்பினார். பினராய் விஜயன் கேரளாவில் மத சார்பின்மையை பாதுகாத்து வருகிறார் எனவே அவர் குறிவைக்கப்பட்டு உள்ளார் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  உறுப்பினர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்