முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் துரிதமான விசாரணைக்கு வலியுறுத்தி உள்ளோம்: சுஷ்மா சுவராஜ்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலளிக்கையில் இவ்விவகாரத்தில் துரிதமான விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வரவேற்பு
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிலநாட்கள் பாராளுமன்றம் வராமல் பணியாற்றிய சுஷ்மா சுவராஜ் நேற்று பாராளுமன்றம் வந்தார். அவர் வந்தபோது பாராளுமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதலில் மத்திய அரசு வாயை மூடிக்கொண்டு உள்ளது என எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பாராளுமன்றத்தில் பதிலளித்த சுஷ்மா சுவராஜ், “நாங்கள் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அமைதியாக இருக்கிறோம் என கூறுவது முற்றிலும் தவறானது.

வலியுறுத்தி உள்ளோம்
அமெரிக்காவில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்டது தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்திடம் இந்தியா "ஆழ்ந்த கவலையை" எடுத்துரைத்து உள்ளது என கூறிஉள்ள சுஷ்மா சுவராஜ், “இவ்விவகாரத்தில் எதிர்பார்த்ததைவிட நாங்கள் அதிகமான பணியை செய்து வருகிறோம்,” என கூறிஉள்ளார்.

வருத்தத்தை தெரிவித்தோம்
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சியில் அமர்ந்த பின்னர் இஸ்லாமியர்கள் இலக்காக்கப்பட்டனர். வெளிநாட்டவர்களும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இந்தியர்கள் மீது அமெரிக்காவில் இனவெறி தாக்குதலானது தொடர்ந்தது. இவ்விவகாரம் தொடர்பான வருத்தத்தை இந்தியா தெரிவித்தது.

குடும்பத்தாரிடம் பேசினேன்
இதுபோன்ற நடவடிக்கையில் பா.ஜனதா அரசு ஒருபோதும் அமைதியாக இருந்தது கிடையாது. இது எங்களுடைய கலாச்சாரம் கிடையாது. எதிர்பார்த்ததை விட நாங்கள் அதிகமான பணியை செய்து வருகிறோம்,” என்ற கூறிஉள்ளார். உடல்நிலை சரியில்லாமல் நான் ஓய்வு பெற்று வந்தபோதும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் பேசினேன், இந்திய அதிகாரிகளிடமும் பேசினேன், பாதிக்கப்பட்டவர்களை நாட கேட்டுக்கொண்டேன் என்றார்.

தேவையான நடவடிக்கைக்கு...
பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது ஆனால் அவர் என்னுடைய அமைச்சகத்திடம் இருந்து தினமும் கேட்டுக் கொண்டு இருந்தார் என சுஷ்மா சுவராஜ் பதிலளித்து உள்ளார். இந்தியர்கள் மீதான தாக்குதலை உயர்மட்ட அளவில் இந்திய அரசு அமெரிக்காவிடம் எடுத்து சென்று உள்ளது. அமெரிக்காவிடம் ஆழ்ந்த கவலையையும் பதிவு செய்து உள்ளது, அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைக்கு நாங்கள் அழைப்பு விடுத்து உள்ளோம், இந்தியர்கள் மீதான தாக்குதல் விவகாரங்களில் துரிதமான விசாரணைக்கு நாங்கள் வலியுறுத்தி உள்ளோம் என்றும் சுஷ்மா சுவராஜ் கூறிஉள்ளார். இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்ற போது அந்நாட்டு அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

முக்கியத்துவம் கொடுக்கும்
“பாராளுமன்றத்தில் மீண்டும் ஒரு உறுதியை அளிக்க விரும்புகின்றேன், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கும்,” என சுஷ்மா சுவராஜ் கூறிஉள்ளார். இந்திய என்ஜினியர் ஸ்ரீனிவாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட கான்சாஸ் சம்பவத்திற்கு டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்ததையும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்