முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக திறனாய்வு தடகளப்போட்டி ஹில்டன் பள்ளி சாதனை

புதன்கிழமை, 15 மார்ச் 2017      திருநெல்வேலி

உலக திறனாய்வு தடகளப்போட்டிகளில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர்.மண்டல அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே உலக திறனாய்வு தடகளப் போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் என். மார்ட்டின் உயரம் தாண்டுதலில் முதல் இடமும், மாணவி கே. காயத்ரி நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடமும், மற்ற 5 மாணவ, மாணவிகள் முதல் 10 இடங்களுக்குள் வந்தனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ6000 த்திற்கான காசோலை வழங்கப்பட்டது.இம்மாணவ, மாணவிகளை பள்ளி தாளாரும், முதல்வருமான ஆர்.ஜெ.வி. பெல், துணை முதல்வர் கிரேஸ் கஸ்தூரி பெல் மற்றும் உடற்கல்வி ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்