முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலி மாவட்டத்தில் 101 நீர் நிலைப்பணிகள் ரூ.6.14 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தகவல்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பெத்தநாடார்பட்டி கிராமம், நாகல்குளத்தில் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் ரூ.6 இலட்சம் மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி  கலந்து கொண்டு, கலெக்டர்  மு.கருணாகரன், , திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன்  ஆகியோர்  முன்னிலையில் குடிமராமத்துப் பணிகளை தொடங்கி வைத்தார்கள். பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர்  செய்தியளார்களிடம் தெரிவித்ததாவது-புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2016ம் ஆண்டில் பருவமழை பொய்த்ததன் காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுகிறது. வறட்சியினை சமாளிக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடிநீர் பிரச்சனையினை தீர்க்கவும், வருங்கால நீர் நிலமைகளை கருத்திற் கொண்டு ஒரு அத்தியாவசிய பணியாக மாநிலத்தில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களையும் முறையாக ஒழுங்கப்படுத்தவும், நீர் நிலைகளை மீட்டெடுக்கவும், குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இன்று தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் தமிழகம் முழுவதும் 30 மாவட்டங்களில் உள்ள 1,519 பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டிலான குடிமராமத்துப் பணிகளை தொடங்கி வைத்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் மூலம் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் 101 பணிகள் ரூ.6.14 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குளக்கரை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளிலுள்ள சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றுதல், குளக்கரையில் உள்ள மழைநீர் வழிந்தோடிகள் மற்றும் பள்ளங்களை சரிசெய்து, குளக்கரை பலப்படுப்படுத்துதல், மதகுகளின் கதவுகளை சீர் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் மழைக்காலங்களில் அதிகளவு குளங்கள் நீர் நிரம்பும் வாய்புள்ளது. இது விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி  தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், பொதுப்பணித் துறை தென்காசி நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் காளிராஜ், உதவி செயற்பொறியாளர் மதனசுதாகரன்,  தமிழ்நாடு டான்பேட் துணைத் தலைவர் கண்ணன் என்ற ராஜூ, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நெசவாளர் கூட்டுறவு  சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்