முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேம்பத்தூர் குளத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணி: வருவாய் அலுவலர் சோ. இளங்கோ தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் உத்தரவின்படி,கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்  சோ. இளங்கோ ,                 மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயகுமார்  முன்னிலையில், தோவாளை வட்டாரத்திற்குட்பட்ட திருப்பதிசாரம் கிரமாத்திலுள்ள வேம்பத்தூர் குளத்தில் ரூ. 5 இலட்சம் செலவில் தூர்வாரும் மற்றும் புனரமைப்பு பணிகளை  நேரில் சென்று தொடங்கி வைத்து, பார்வையிட்டார்கள். தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும்வகையில், தமிழகம் முழுவதும் குடிமராமத்து முறையில், திட்டப்பணிகளை  தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிச்சாமி , இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவக்கி வைத்து, இப்பணிகளை உடனடியாக பிற மாவட்டங்களிலும் தொடங்கி வைக்குமாறு உத்தரவிட்டார்.  அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு வடிநில கோட்டம், நாகர்கோவில் நீர் ஆதார அமைப்பின் கீழ், மொத்தம் 37 பணிகளாக, குளங்கள் மற்றும் குளங்களின் வரத்துக் கால்களில் (59 இடங்களில்) ரூ. 195.00 இலட்சத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் உத்தரவின்படி, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்  சோ. இளங்கோ , மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயகுமார்  முன்னிலையில், தோவாளை வட்டாரத்திற்குட்பட்ட திருப்பதிசாரம் கிரமாத்திலுள்ள வேம்பத்தூர் குளத்தில்  ரூ. 5 இலட்சம் செலவில் தூர்வாரும் மற்றும் புனரமைப்பு பணிகளை  நேரில் சென்று தொடங்கி வைத்து, பார்வையிட்டு, குளத்திலிருந்து எவ்வளவு நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, சுமார் 184 ஏக்கர் பாசன வசதி பெறும் எனவும், குளத்தின் கொள்ளளவு 8.440 (ஆஉரஅ)இ தற்போது நீர் இருப்பு 2 மூ உள்ளதாகவும், மேலும், சம்பந்தப்பட்ட குளத்தின் பாசனதாரர்களின் 10சதவீதம் பங்களிப்புடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தார்கள்.நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) எஸ்.கே.சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் டி. விஜயகுமார், உதவி பொறியாளர் ஜே.ஆர். வின்சென்ட் லாறன்ஸ், தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  சி.கலைச்செல்வி,  எஸ். ரோஸிதா, அரசு வழக்கறிஞர் ஞானசேகரன்,  என்.என். ஸ்ரீஐயப்பன்,  தாணுபிள்ளை,  எஸ். ராஜரெத்தினம்,  வேல்முருகன்,  நாஞ்சில் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago