முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்திரப்பட்டி கண்மாயில் ரூ.7 லட்சம் செலவில் குடிமராமத்து பணி அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் சத்திரப்பட்டி கண்மாயில் ரூ.7 இலட்சம் செலவில் கலெக்டர் எம்.ரவி குமார், தலைமையில்   செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ  குடிமராமத்து பணியை தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் மறைந்த  தமிழக முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் வழகாட்டுதலின்படி  தமிழ்நாடு முதலமைச்சர்  இத்திட்டத்தினை தொடக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு, பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க ஆணையிட்டது. அதனைத்தொடர்ந்து  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ  தூத்துக்குடி மாவட்டத்தில் 13 கண்மாய்களில் குடிமராமத்து பணியினை மேற்கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் பங்களிப்பு 10 வீதமும், அரசின் பங்களிப்பு 90 சதவீதமும் ஆக மொத்தம் 100 சதவீதம் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படுகிறது. ஏரி, கால்வாய் மதகு புனரமைப்பு  குடிமராமத்து திட்டத்தில் நீர் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தரராஜ், தூத்துக்குடி வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் மாசிலாமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்ஜெகவீரபாண்டியன், கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், சேவுகபாண்டி, வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன், அதிமுக கோவில்பட்டி பெருநகரகழக செயலாளர் எஸ்.விஜயபாண்டியன்,ஒன்றியசெயலாளர் அய்யாத்துரைபாண்டியன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் பொன்ராஜ், மாவட்ட விவசாயஅணி செயலாளர் ராமச்சந்திரன், அம்மாபேரவை ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரபாண்டியன், வண்டாணம் கருப்பசாமி, அம்மாபேரவை மகாலட்சுமிசந்திரசேகர், முன்னாள் வைஸ்சேர்மன் ராமர், அம்பிகா வேல்மணி, நாலாட்டின்புத்தூர் அய்யனுராஜ், பாண்டவர்மங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், அம்மாபேரவை கடலையூர்ரோடு செண்பகமூர்த்தி, மாவட்ட துணைசெயலாளர் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், காந்திநகர் 1வது வார்டு செயலாளர் மாடசாமி, 36வார்டு செயலாளர் வைகுண்டபாண்டியன், மாவட்டபிரதிநிதி பொன்னுச்சாமி, நகர மாணவரணி நகரசெயலாளர் எல்.எஸ்.பாபு, பீவி. சீனிவாசன், அம்மா பேரவை பாலாஜி, அம்மா பேரவை சந்திரசேகர் . இளைஞர் பாசறை பழனிக்குமார், மாதவன், எஸ்.கே.மாயா, சிவகாடு பாலமுருகன், அமைப்புசாரா அணி விஜயக்குமார், டிரைவர் செல்லையா, மாவட்ட இணைசெயலாளர் கலைவாணி கோவிந்தராஜன், நிலவளவங்கி தலைவர் கணபதிபாண்டியன், இயக்குனர் ஜெமினி, புதுகிராமம் ஆரோக்கியராஜீ, எம்ஜீஆர் மன்றம் குருநாதன், ஆ. கணேசன், அம்மாபேரவை சந்திரசேகர், வானரமூட்டி அலங்காரபாண்டியன், வழக்குரைஞர்கள் சங்கர்கணேஷ், விஜயபாஸ்கர் 28வது வார்டு செயலாளர் மாரிச்சாமி, 29வது வார்டு நகர கூட்டுறவு வங்கி கடன்சங்கதலைவர் மாரியப்பன், கூட்டுறவு பால்சொஸைட்டி தலைவர் வெள்ளத்துரை, பெரியசாமி பாண்டியன், ஆபிரகாம்அய்யாத்துரை, கேண்டீன்நைனா,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்