முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வள்ளியூர் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சி ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை திறந்து வைத்தார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை இராதாபுரம் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை  திறந்து வைத்து, புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார்கள்.  புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசின் திட்டங்கள், சாதனைகளை பொதுமக்களுக்கு கொண்டும் செல்லும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ஊரக பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திட சிறப்பு புகைப்பட கண்காட்சிகள் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படவுள்ளது. இன்று வŸëôçš புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில்  புரட்சி தலைவி அம்மா அவர்கள் கொண்டுவரப்பட்ட திட்டங்கள்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், தொடங்கி வைக்கப்பட்ட பணிகள் உட்பட பல்வேறு அரசின் சாதனைகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. பொதுமக்கள் புகைப்பட கண்காட்சியை அதிக அளவில் பார்த்து அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதிநவீன எல்இடி வாகனத்தின் மூலம் அரசின் சாதனை குறித்த வீடியோ படக்காட்சியும் நடத்தப்படுகிறது. இதில் முக்கிய பிரமுகர்கள்  ஞானபுனிதா, அழகானந்தம், அந்தோணி அமலராஜா, தவசிமுத்து, மாடசாமி, பொன்னரசு, சண்முகபாண்டியன், செழியன், உடையார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago