முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனர் ஹரி தலைமையில் கச்சனாவிளை கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி

புதன்கிழமை, 15 மார்ச் 2017      தூத்துக்குடி

நாசரேத் அருகிலுள்ள கச்சனாவிளை கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி சிங்கம் பட இயக்குனர் ஹரி தலைமையில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவின்படி தமிழகத்தில் முதற்கட்டமாக 13 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டஆட்சியர் இரவிக்குமார் குளங்கள்,தனியார் நிலங் களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை அதிரடியாக அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளார்.அதன்படி ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் நாசரேத் மற் றும் அதனைச் சுற்றியுள்ள பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் ஜே.சி.பி.இயந்திரங்கள் மூலம் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. கச்சனாவிளை சாமி பட இயக்குனர் ஹரி சொந்த ஊராகும். தனது சொந்த கிராமத்திலுள்ள சீமைக்கருவேல மரங்களை தனது சொந்த செலவில் அகற்ற திட்ட மிட்டு அதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.3 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் கச்சனாவிளை கிராமத்தில் சீமைக்கருவேலமரங்கள் அகற்றப்ட்டு வரு வதை டைரக்டர் ஹரி பார்வையிட்டார்.இப்பணியில் கச்சனாவிளை கிராமத்தைச்சுற்றி யுள்ள தன்னார்வ தொண்டர்கள் திருச்செந்தூர் ஆதித்தனார் கலைக்கல்லூரி பேராசிரியர் ஏ.ஆர்.பி.டி. முத்துக்குமார் தலைமையில் ஈடுபட்டனர். சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை பார்வையிட்டபின் டைரக்டர் ஹரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தர விட்ட உயர்நீதிமன்றஉத்தரவு அருமையானது.வரவேற்கதக்கது.அதனை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் செம்மையாக செயல்படுத்தி வருவதை பாராட்டுகிறேன். மேலும் எனது சொந்த ஊரான கச்சனாவிளைக் கிராமத்திலுள்ள சீமைக்கருவேல மரங்கள் அனைத்தையும் எனது சொந்த செலவில் அகற்ற 3 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பக்கத்து ஊரைச் சார்ந்த இளைஞர்கள், தன்னார்வ தொண்டர்கள் திருச்செந்தூர் ஆதித்தனார் கலைக் கல்லூரி பேராசிரியர் ஏ.ஆர்.பி.டி.முத்துக்குமார் தலைமையில் செயல்பட்டு வருவதை மனதார பாராட்டுகிறேன்.சிங்கம் 3 படம் வெற்றியை தொடர்ந்து ஊருக்கு வந்து இந்த நல்லதொரு பணியை செய்வதில் மனநிறைவடைகிறேன்.மேலும் சாமி பாகம் 2 விரைவில் வெளி வரஇருக்கிறது.சாமி படத்தில் நடித்த விக்ரம் தலைமையிலான குழுவினரே இதிலும் நடிக்க உள்ளனர்.இப்படம் முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்திலே படமாக்கப்பட உள்ளது. 14 வருடத்திற்கு அப்புறம் சாமி வேட்டை தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அவருடன் திருச்செந்தூர் ஆதித்தனார் கலைக் கல்லூரி பேராசிரியர் ஏ.ஆர்.பி.டி.முத்துக்குமார்,கச்சனாவிளை ஊராட்சிமன்ற முன்னாள் துணை தலைவர் தங்கத்துரை,நாசரேத் முத்துக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்