கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 15 மார்ச் 2017      கடலூர்
Mar 13-h

கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்  கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு கலெக்டர்  நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றார்.இன்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 348 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.மாவட்ட சிறுசேமிப்பு நலத்துறையின் மூலம் நடைபெற்ற கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்ற 12 மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பராட்டுச்சான்றிதழ்களை கலெக்டர்  வழங்கி கௌரவித்தார். மேலும், சிறுசேமிப்பு துறையின் கீழ் சிறப்பாக பணிபுரிந்த 27 ஆண் மற்றும் பெண் முகவர்களுக்கு பரிசுப்பெருட்கள், ரூ.39000-க்கான Nளுஊ டீழனெ மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், கலெக்டர்  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவில் 2015-16ம் ஆண்டிற்கான 10-வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவர்களுக்கு  தலா ரூ.15000- வீதம் வழங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 2015-16ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு ரூ.6000-க்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழையும் கலெக்டர்  வழங்கினார்.இக்குறைகேட்புக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்தராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு) கணேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன் உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: