முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழுமூர் கிராம மனுநீதி நாள் விழாவில் 127 பயனாளிகளுக்கு ரூ.50.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : மாவட்ட வருவாய் அலுவலர் வேலு வழங்கினார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா குன்னம் வட்டம், எழுமூர்(மே) கிராமத்தில் நேற்று (15.03.2017) மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு தலைமையில் நடைபெற்றது.

 

மக்களை தேடி நிர்வாகம்

 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், மக்களைச் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் மக்களைத் தேடி அரசு நிர்வாகம் என்ற இதுபோன்ற முகாம்களை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடத்தி, உரிய பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் முழுவதும் எழுமூர்(மே) உள்ளிட்ட கிராமங்களில் அரசு அலுவலர்கள் முகாமிட்டு, அரசு அலுவலர்கள் அனைவரும் தங்களது துறை சார்ந்த மக்கள் நலத் திட்டங்களுக்குரிய பயனாளிகள் இனம் கண்டறிந்து, அதன் மூலம் நேற்று (15.03.2017) பல்வேறு துறைகளின் சார்பில் 127 பயனாளிகளுக்கு 50,28,625- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்க ஏற்பாடு செய்யவேண்டும். இதன்மூலமாக குழந்தைகளின் எதிர்காலம் வளமுள்ளதாக மாறும். மேலும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் 18004254556 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இங்கு அனைத்து துறை அலுவலர்களாலும் தெரிவிக்கப்பட்ட அவர்களது துறை சார்ந்த மக்கள் நலத் திட்டங்களை மக்கள் அனைவரும் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள வறட்சி நிவாரண நிதி சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரவுவைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் வங்கிக்கணக்கை சரிபார்த்துக்கொள்ளவேண்டும். பணம் கிடைக்கப்பெறாத விவசாயிகள் தங்கள் கிராம நிர்வாக அலுவலரை அணுகி தங்களது வங்கிக்கணக்கை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.13,60,000- மதிப்பிலான உதவிகளும், தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.85,200- மதிப்பிலான கல்தூண் பந்தல் சாகுபடி, இனகவர்ச்சி பொறி, ஒளிபொறி, மஞ்சள் பொறி போன்ற உபகரண உதவிகளும், புதுவாழ்வுத்திட்டம் மூலம் அமுதசுரபி கடன் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.2,00,000ஃ- கடன் உதவிகளும், வருவாய்த்துறை மூலம் 71 பயனாளிகளுக்கு ரூ.17,35,500- மதிப்பிலான சாலை விபத்து நிவாரணம், நத்தம் இலவச வீட்டு மனை பட்டா, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத்துறை மூலம் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்டவைகள் மூலம் 28 பயனாளிகளுக்கு ரூ.15,73,300ஃ- மதிப்பிலான கீழ்பாசன குழாய், விசைதுளைப்பான், சுழற்கலப்பை, சூரியஒளி பொறி போன்ற நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ.41,850- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 1 பயனாளிக்கு ரூ.32,375- மதிப்பிலான நலத்திட்ட உதவியும் என 127 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.50,28,285ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இச்சிறப்பு மனுநீதிநாள் நிறைவு விழாவில் மொத்தம் 63 மனுக்கள் பெறப்பட்டு, 42 மனுக்கள் ஏற்கப்பட்டு, 21 மனுக்கள் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர்(ச.பா.தி) புஷ்பவதி, மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், வருவாய் வட்டாட்சியர் தமிழரசன், வட்டாட்சியர்(ச.பா.தி) மனோண்மணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago