முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூரில் நடந்த கனரா வங்கி விழாவில் 24 பள்ளி மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, ரூ.1 கோடியே 2 லட்சம் நிதியுதவி : கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      கரூர்

கரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கனரா வங்கி விழாவில் 24 பள்ளி மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகைகளையும், 15 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க ரூ.1 கோடியே 2 இலட்சம் மதிப்பீட்டில் நிதியுதவிகளையும் நேற்று (15.03.2017) மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், வழங்கி தொழிலில் சிறந்து விளங்க ஆலோசனை வழங்கினார்.

 

கனரா வங்கி விழா

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

1906-ம் ஆண்டு அம்மாம்பாள் சுப்புராவ் பை என்ற ஆசிரியரால் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட வங்கியான கனரா வங்கியின் சார்பில் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் கரூர், தாந்தோன்றிமலை, திருக்காம்புலியூர், ஆண்டான்கோவில் கீழ்பாகம் ஆகிய பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக 5, 6, 7 ஆகிய வகுப்பு மாணவிகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தலா ரூ.2,500-ம் 8, 9, 10 வகுப்பைச் சேர்ந்த மாணவிகளுக்கு தலா ரூ.5000 கல்வித் தொகையும் வழங்கி வருகிறார்கள். உலகில் மற்றவர்களுக்கு உதவக்கூடிய உள்ளம் படைத்தவர்களே வலிமை மிக்கவர்கள் என்ற கருத்திற்கேற்ப ஏழை, எளிய மாணவிகளுக்கு உதவிடும் இந்த நல்ல நோக்கத்தை ஒவ்வொரு மாணவிகளும் மனதில் கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதித்து கல்வியில் மேம்பட வேண்டும். இதே போன்று கடனுதவி பெறும் பயனாளிகள் இந்த தொகைகளை கொண்டு தொழிலில் சிறந்து விளங்கி தங்கள் வாழ்வாதாரத்தையும்,பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதோடு பெற்ற கடனை உரிய காலத்தில் செலுத்தி வங்கியின் வளர்ச்சிக்கும் உதவிட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், கனரா வங்கி திருச்சி மண்டலம் துணை பொது மேலாளர் கே.பாலவிநாயகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, கரூர் கிளை உதவி பொது மேலாளர் ஆவுடையப்பன், முதுநிலை மேலாளர் கிரிதரன், கிளை மேலாளர்கள் சரணாதேவி (தாந்தோன்றிமலை), இலக்குமணன் (டெக்ஸ்டைல்பார்க்), குமாரமூர்த்தி (சிறுதொழில்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், வங்கி வணிக அலுவலர்கள் சிவக்குமார், ராகவேந்திரன் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago