கீழ்சிறுப்பாக்கம் ஏரியில் உள்ள கருவேல மரங்களை பெ்துமக்கள் உதவியுடன் அகற்றும் பணி: டிஎஸ்பி தேவநாதன் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      திருவண்ணாமலை
photo01

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் கீழ்சிறுப்பாக்கத்தில் உள்ள ஏரியில் கருவேல மரங்களை அகற்றும் விதமாக டிஎஸ்பி தேவநாதன் பெண்கள் நினைத்தால் எந்த மாற்றத்தையும் கொண்டுவரலாம் என்றார். கீழ்சிறுப்பாக்கம் ஏரியில் உள்ள கருவேல மரங்களை பெ்துமக்கள் உதவியுடன் அகற்றும் பணியினை டிஎஸ்பி தேவநாதன் துவக்கி வைத்து பேசியதாவது: இந்த கருவேல மரங்களால் நமக்கு பெருத்த கஷ்டம் உருவாகிறது. முதலில் நமது குடிநீர் பிரச்சனையினை உருவாக்குகிறது. பின்னர் விவசாயத்துக்குண்டான தண்ணீரை அதிக அளவில் இந்த மரம் உறிஞ்சி பூமியை வறண்டு போக செய்கிறது. இதன் வேர் பூமியில் மிக அதிகமான ஆழத்திற்கு சென்று பூமியில் உள்ள மொத்த தண்ணீரையும் உறிஞ்சி நிலத்தை பாலைவனமாக்குகிறது. இது உங்கள் பூமி. உங்களுக்ு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீர் காணாமல் போவதை தடுக்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி ஏரியில் மழைநீர் தேங்க வழி செய்ய வேண்டும் என்ற போது கூட்டத்தில் ஒருவர் இந்த வேலையை ஏன் அரசாங்கம் செய்க் கூடாது என்றார். அதற்கு டிஎஸ்பி இது போன்று நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஆசாமிகள் தாம் ஊர் முனனேறவிடாமல் தடுப்பவர்கள். இவர்களை போல் உள்ள சிலரை ஒதுக்கிவிட்டு ஊர் பசுமையாக மாற வழி செய்யுங்கள். இங்கு அதிகமாக பெணகள் உள்ளீர்கள். பெண்கள் நினைத்தால் மாபெறும் மாற்றத்தை கொண்டுவரலாம். யாராவது செய்யட்டும் என நீங்கள் ஒதுங்கிக்கொண்டால் ரியல் எஸ்டேட்காரர்கள் இதனை பிளாட் போட்டு விற்றுவிட்டு கோடீஸ்வரனாகி விடுவார்கள். வாழ்நாள் முழுவதும் நீங்கள் இப்படியே தண்ணீர் இல்லை,வீடு இல்லை,சாப்பாடு இல்லை என கோஷம் போட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். நமக்கு தேவையான அனைத்தையும் அரசு தான் செய்ய வேண்டும் என கூறினால் ஒரு வேலையும் நடக்காது. சில விஷயங்களை நமக்கு நாமே தான் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றார். உடன் எஸ்ஐ உதயசூரியன், எஸ்எஸ்ஐ அழகேசன் உட்பட பலர் இருந்தனர். பின்னர் ஜெசிபி மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: