பண்ணந்தூர் கிராமத்தில் 343 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சத்து 24 ஆயிரனி மதிப்பிலான வகையான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
2

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பண்ணந்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் பண்டரிநாதன் அவர்கள் வரவேற்றுரையாற்றினார்.பின்பு துறை வாரியாக அதாவது வேளாண்மைத்துறை, தோட்டக்கரைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தும் திட்டங்கள் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவர்கள் மூலமாக விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.பின்னர் கலெக்டர் பேசும் பொழுது : மக்கள் தொடர்பு திட்டமானது அரசின் திட்டங்கள் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு மக்களை தேடி கிராமங்களுக்கு சென்று இது போன்ற முகாம்களை அமைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இந்த முகாமின் நோக்கமாகும். அதனடிப்படையில் பண்ணந்தூர் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருதில் கொண்டு இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த பகுதியில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சொட்டு நீர் பாசனம் அமைத்து அதிகளவில் சாகுபடி உற்பத்தி விவசாயிகள் செய்து பயனடைய வேண்டும். பொது இடங்களில் மலம் கழிப்பது கூடாது. தமிழக அரசானது கழிப்பிடம் கட்ட மான்யத் தொகை வழங்குகிறது. 3-மாதத்திற்குள்; நமது மாவட்டத்தில் கழிப்பிட வசதி அனைத்து வீடுகளில் அமைத்திருக்க வேண்டும்.பொது இடங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க கிராமபுறங்களில் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தண்ணீரை சேகரிப்பதோடு அதனை பாதுகாப்பான முறையில் மூடி அமைத்து வீடுகளில் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மிகவும் அவசியமானது கல்வி. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பாடபுத்தகங்கள், கல்வி ஊக்கத்தொகை, சீருடை என பல்வேறு வகையான திட்டங்களை வழங்கி வருகிறது. ஆகவே கிராமபுற பெண்கள் கல்வியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் இளம் வயது திருமணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் பண்ணந்தூர் கிராம பகுதிக்கு தேவையான மேம்பாலம், கணினிசேவை மையம் பூசுசெய்தல், மெர்குரி விளக்கு அமைத்தல், பண்ணந்தூர் முதல் தட்ரஹள்ளி வiரை சாலையை சீர் செய்தல் மற்றும் அரசு ஆண்கள் ஃ பெண்கள் மேல்நிலை பள்ளிகளுக்கு சைக்கிள் ஸ்டேண்ட், சுடுகாடு சுற்றுச் சுவர் உள்ளிட்ட கோரிகையை விடுத்துள்ளீர்கள் விரைவில் செய்து கொடுக்கப்படும். மேலும் இன்று மட்டும் பண்ணந்தூர் கிராமத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா 99, பட்டாமாறுதல்-40, உட்பிரிவு செய்த பட்டா-41, புதிய குடும்ப அட்டை-114, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்-10, கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ்-4, பிற்படுத்தப்பட்டோர் நல இலவச சலவைப் பெட்டி-10, என ஆக மொத்தம் 343 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சத்து 24 ஆயிரத்து 124 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெற வேண்டுமென கலெக்டர் சி.கதிரவன் இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அருண், தனி துணை கலெக்டர் ( சமூக பாதுகாப்பு திட்டம் (பொ) ரகு குமார், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சங்கரன், கலெக்டர் நேர் முக உதவியாளர் (வேளாண்மை) பானுமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர், உதவி ஆணையர் ஆயம் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், பட்டு வளர்ச்சித் துறை துணை இயக்குநர் வீரராகவன், உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத் துறை ) டாக்டர் வேடியப்பன் தாட்கோ மேலாளர் மீனாட்சி சுந்தரம், மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் மிருளாழினி நன்றியுரையாற்றினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: