முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர்களால் உலர் தீவனம் தரமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு விற்கப்படுகிளது: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      தர்மபுரி

தருமபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் 2016-17ம் ஆண்டிற்கு 12 உலர் தீவனக் கிடங்குகள் ஆரம்பிக்க அரசு ஆணை பிறப்பித்து, உலர் தீவனக் கிடங்குகளில் உலர் தீவனம் (வைக்கோல்) விற்பனை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது. அதில் அனைத்து கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடமிருந்து உரிய உலர் தீவன விற்பனை செய்யும் அட்டைகளை பெற்று, உலர் தீவனம் வழங்கும் தீவனக் கிடங்குகளிலிருந்து உலர் தீவனம் பெற்று பயனடைந்து வருகின்றனர். கால்நடை பராமரிப்புத்துறையின் அலுவலர்கள் உலர் தீவன கிடங்குகளில் வழங்கப்படும் உலர் தீவனம் நல்ல தரமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்து வழங்கப்படவிருக்கும் வைக்கோல் நல்ல தரமானதாக இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு ஏதேனும் தரமற்றதாகவும் கால்நடைகள் உண்பதற்கு ஏற்றதாக இல்லை என்று கண்டறிந்தால் அந்த வைக்கோலை விநியோகம் செய்யாமல் ஒப்பந்ததாரர்களுக்கே திருப்பி அனுப்பப்படுகிறது. இவ்வாறாக நல்லம்பள்ளி மற்றும் அரூர் உலர் தீவனக் கிடங்குகளில் தரமற்றது என்று கண்டறியப்பட்ட சுமார் 500 கிலோ வைக்கோல் கால்நடைகளுக்கு வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்றும் தீவனம் தரமானதாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ள ஒவ்வொரு தீவனக் கிடங்கிற்கும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தரத்தினை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் கூறும்போது விவசாயிகள், வைக்கோல் பெறும் போது நல்ல தரமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்து, தரமானதை பெற்றுச் செல்லுமாறும் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளை கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்