முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில், சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.

புதன்கிழமை, 15 மார்ச் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்த பொது மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு பேரணியை சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையால் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஆணையர் தமிழ்க்குமரன்  முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி கொடியசைத்து  தொடங்கிவைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

         திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி, கண்மாய் போன்ற நீர்நிலைகளிலும், விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள் மற்றும் விவசாயப் பயன்பாட்டில் அல்லாத பிற நிலங்கள் மற்றும் பொது இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நீர்நிலைகள் மற்றும் நிலம் சார்ந்த இடங்கள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபட்டு பொதுமக்களுக்கும் இயற்கைக்கும் பெரிதும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக சீமைக் கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்து விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  எனவே அனைத்து இடங்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிட மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) உத்திரவிட்டுள்ளது.

                  இதனை தொடர்ந்து , திருப்பூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பொது மக்களுக்கு சீமைக்கருவேல மரங்களினால் உண்டாகும்  பாதிப்புகள்குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் சீமைக்கருவேல மரங்களின் பாதிப்புகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாதைகளை ஏந்திய வாறும், கோஷமிட்டவாறும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியை சேர்ந்த மாணவியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள்  உட்பட சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.            

         இதனை தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி பழவஞ்சிபாளையத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அகற்றப்பட்டிருந்த சீமைக்கருவேல மரங்களையும் மாவட்ட கலெக்டர் மற்றும் வழக்கறிஞர் ஆணையர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

 இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்  திட்ட இயக்குநர் குருநாதன், மாநகராட்சி ஆணையாளர் அசோகன, மாநகர செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன, உதவி இயக்குநர் ( ஊராட்சிகள்) சங்கமித்திரை, மாநகர நகர் நல அலுவலர் பூபதி உதவி ஆணையர்கள் கண்ணன் , சபியுல்லா , மாணவ, மாணவியர்கள்   உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்