முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் மற்றும் வழக்கறிஞர் ஆணையர் தனசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புதன்கிழமை, 15 மார்ச் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில்,  சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ்  முன்னிலையில் வழக்கறிஞர் ஆணையர் தனசாமி  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

          இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஆணையர் தனசாமி  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

          மதுரை உயர்நீதிமன்றத்தில் மாவட்டந்தோறும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது தொடர்பாக மனுதாக்கல் செய்துள்ளதின்பேரில் ஈரோடு மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியினை எவ்வளவு சதவீதம் முடிவடைந்துள்ளது என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டி வழக்கறிஞரின் ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதன்பேரில் ஈரோடு மாவட்டத்தில் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு செய்வதற்கு நானும் மற்றொருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும்பணி முழுவீச்சில் நடைபெற்று 36 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது. மேலும் காசிபாளையம், பூந்துறைசேமூர், மொடக்குறிச்சி பகவதிநகர், நஞ்சைஊத்துகுளி ஆகிய பகுதிகளிலும்  இன்றைய தினம் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இதுகுறித்து முழுமையான அறிக்கையினை தயார் செய்து சமர்ப்பிக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி உதவி ஆணையர் அசோக்குமார்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார், இந்தியன் பப்ளிக் பள்ளி நிர்வாக இயக்குநர் ஊர.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்