முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மாபட்டிபெருமாள் கோவிலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.அ.தி.மு.க வேட்பாளராக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.அதனை முன்னிட்டு 50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மாபட்டி மிகவும் பழைமை வாய்ந்த பெருமாள் கோவிலில் கூட்டுறவு சங்க தலைவர் அம்சு தலைமையில் ஏராளமான அ.தி.மு.கவினர் சிறப்பு பூஜை செய்தனர்.கோவில் முன்பாக பொங்கல் வைத்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.மேலும் இந்நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் பொதுமக்களுக்கு மரகன்றுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை அ.தி.மு.க பாசறை கிளை செயலாளர் புதுராஜா மற்றும் அ.தி.மு.க.வினர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்