எஸ்.எம்.கிருஷ்ணா பா.ஜ.கவில் இணைவது தள்ளிவைப்பு

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      அரசியல்
SM Krishna(N)

பெங்களூரூ   - சகோதரி மறைவு காரணமாக எஸ்.எம்.கிருஷ்ணா, பாஜக வில் இணைவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா (84), டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணை வார் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி எஸ்.எம்.கிருஷ்ணா தனது ஆதரவாளர் களுடன் நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.

இந்நிலையில் பெங்களூரு வில் எஸ்.எம்.கிருஷ்ணா வின் சகோதரி சுனிதா நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந் தார். இத்தகவல் அறிந்த எஸ்.எம்.கிருஷ்ணா, பாஜக வில் இணையும் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு பெங்களூரு திரும் பினார். மேலும் பாஜகவில் இணையும் நிகழ்ச்சியை அடுத்த வாரம் வைத்துக்கொள்ளலாம் என அமித்ஷாவிடம் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாக தெரிகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: