முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 8,52,972 பேர் வாக்காளர்களாக உள்ளனர் : கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 134-அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியல்

 

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் 2017ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்;டது. தற்பொழுது அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி 134-அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 98263 ஆண் வாக்காளர்களும், 104536 பெண் வாக்காளர்களும், மொத்தம் 202799 வாக்காளர்களும், 135-கரூர் சட்டமன்ற தொகுதியில் 111515 ஆண் வாக்காளர்களும், 121593 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும், மொத்தம் 233110 வாக்காளர்களும், 136-கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 100184 ஆண் வாக்காளர்களும், 104363 பெண் வாக்காளர்களும், 41 இதர வாக்காளர்களும், மொத்தம் 204588 வாக்காளர்களும், 137-குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 104490 ஆண் வாக்காளர்களும், 107983 பெண் வாக்காளர்களும், 2 இதர வாக்காளர்களும், மொத்தம் 212475 வாக்காளர்களும், என மொத்தம் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 4,13,289 ஆண் வாக்காளர்களும், 4,37,186 பெண் வாக்காளர்களும், 45 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 8,52,972 வாக்காளர்களும் உள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 134-அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 1260 ஆண் வாக்காளர்களும், 1383 பெண் வாக்காளர்களும் மொத்தம் 2643 வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 97 ஆண் வாக்காளர்களும், 94 பெண் வாக்காளர்களும் மொத்தம் 191 வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.சிவப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், வட்டாட்சியர்கள் துரைமுருகன், ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்