முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்பிடிப்பு பகுதியில் கன மழை: பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      ஈரோடு

நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. நீலகிரி மலையில் பெய்யும் மழையே, அணைக்கு பிரதான நீர்வரத்தாகும். அணையில், சேகரிக்கப்படும் தண்ணீரால், இரண்டு லட்சத்து, 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு, போதிய மழை இல்லாததால், பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர், கடந்த செப்.,ல் நிறுத்தப்பட்டது. அதன் பின், கடந்த ஆறு மாதங்களாக குடிநீருக்காக மட்டுமே பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மலைப்பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. அதிகபட்சமாக பில்லூர் அணை, 180 மி.மீ., கல்லாறு, 88.5 மி.மீ., மேட்டுப் பாளையம், 12.50 மி.மீ., மழை பதிவானது. இதனால், நேற்று பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு, 700 கன அடி தண்ணீர் வரத்தானது. அணைப்பகுதி அருகே உள்ள சித்தன்குட்டை பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், 40.24 அடியாக இருந்தது. குடிநீர் தேவைகளுக்காக, பவானி ஆற்றில், 150 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில், ஐந்து கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு, 2.5 டி.எம்.சி. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்