முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மாவட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் 23 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் வீதம் ரூ.69 லட்சத்திற்கான காசோலை : கலெக்டர் பழனிசாமி வழங்கினார்

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

தமிழ்நாட்டில் வறட்சி பாதிப்பு காரணமாக அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து விரிவாக அறிக்கையை அளிக்க அரசு கோரியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்பட்ட இறப்புகள் சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், வயோதிகம், குடும்ப சூழ்நிலை, சம்பந்தப்பட்டவரின் உடல்நிலை போன்ற காரணங்களினால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.

நிதி உதவி

 

 

எனினும் உயிரிழந்த நபர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அக்குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு, மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது. மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 3 இலட்சம் ரூபாய் வீதம், நிவாரணமாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்கள். அதன்பேரில், நேற்று ( 16.03.2017) 23 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.69 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, வழங்கினார்.

 

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர்; நாராயணசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago