முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி செயல்பாடு : கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு செயற்கை சுவாசத்திற்கு உதவி செய்யும் நீர்க்குமிழி சுவாசக்கருவி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இக்கருவியின் பயன்பாட்டினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

 

 

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் அவர்களும் மற்றும் குழந்தைகள் நலத்துறைத் தலைமை மருத்துவர் டாக்டர் கண்ணன் அவர்களும் கருவியின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் அளித்தனர். இதுபற்றி மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கூறியதாவது:

 

சாதாரணமாக நுரையீரல் செயல்திறன் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். அதை சரிசெய்வதற்காக மூச்சுக்குழாயில் ஒரு செயற்கை குழாய் பொருத்தப்பட்டு வென்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும். இதன் மூலம் சிறுகுழந்தைக்கு குரல்வளை பாதிப்பும், நோய்த் தொற்றும் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. மேலும் தாய்ப்பால் குடிக்க முடியாத நிலையும் ஏற்படும். ஆனால் தற்போது மூன்று லட்சம் செலவில் பெறப்பட்டுள்ள இந்த நீர்க்குமிழி சுவாசக் கருவி மூலம் பிறந்த குழந்தையின் மூக்கு வழியாக செயற்கை சுவாசம் அளிக்கலாம். வேண்டிய நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுக்கலாம். இக்கருவி இன்று முதல் மருத்துவமனையில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னதாக அரசு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சீரமைப்புப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த அதி நவீன கருவியினை பயன்பாட்டிற்கு கொண்டுவந்த மருத்துவர்களை பாராட்டியதோடு தாய்ப்பால் வங்கி துவங்குவதற்கும் முயற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். மாவட்ட கலெக்டர் ஆய்வின் போது மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் முத்து மீனாட்சி, குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் அகோரசிவன், செவிலியக் கண்காணிப்பாளர் சகாயராணி உடன் இருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்