முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி அருகே 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      தேனி
Image Unavailable

 போடி, -   போடி அருகே 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகளை போடி ஏ.வி.ச. கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
    தேனி மாவட்டம் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில் தொல்பொருள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு மையம் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ஈஸ்வரமூர்த்தி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பில் தென் மாவட்டங்களில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு பழமையான நடு கற்கள், கற்கால கருவிகள், கல்வெட்டுக்கள், கல் திட்டைகள் உள்ளிட்டவை கண்டுபிடித்து அவற்றை சேகரித்து வருகின்றனர்.
    இதன் ஒரு பகுதியாக வரலாற்றுத்துறை தலைவர் ஏ.ஞானசேகரன் தலைமையில் பேராசிரியர்கள் சி.மாணிக்கராஜ், ஆர்.கபேஷ், ஜி.கருப்பசாமி மற்றும் மாணவர்கள் போடி துரைராஜபுரம் காலனியை அடுத்த மரக்காமலை மலை கிராம அடிவாரப் பகுதியில் மேற்புற கள அகழ்வாய்வு நடத்தினர். அப்போது இப்பகுதி மலைகளில் ஓடைகளை ஒட்டிய பகுதியில் பழமையான முதுமக்கள் தாழிகளை கண்டறிந்தனர்.
     இதுகுறித்து பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியது: இப்பகுதியில் கள ஆய்வு செய்தபோது முதுமக்கள் தாழிகள் இருப்பதற்கான ஈமப் புதைக்குழி சின்னங்கள் காணப்பட்டன. அவற்றை ஆய்வு செய்தபோது கிடைத்த முதுமக்கள் தாழிகள் பழமையானவை. பெருங்கற்காலத்தவை. சுமார் 2500 ஆண்டுகள் பழமையானவை. இவற்றின் குடுவைகளில் அலைகள் போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன. மேலும் குடுவைகளில் ஓரிடத்தில் 'M' போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. இக்குறியீடுகள் மலையேறுபவரை அடக்கம் செய்ததாகவோ அல்லது குடுவைகளை தயாரித்தவரை அடையாளப் படுத்தும் வகையிலோ கருதப்படுகிறது.
      முதுமக்கள் தாழிகள் இரண்டு அடுக்குகளாக காணப்படுகிறது. பெரிய குடுவையும், அதற்குள் சிறிய குடுவையும் காணப்படுகிறது. சிறிய குடுவைக்குள் அடக்கம் செய்யப்படுபவருக்கு தேவையான பொருட்களை சிறிய சட்டி வடிவிலான குடுவைகளில் வைத்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
      குடுவைகள் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் காணப்படுகின்றன. மேலும் பழமையான கத்தி ஒன்றும் காணப்படுகிறது. மேலும் தாழிகளில் சாதாரணமாக அல்லாமல் பெரிய வடிவிலான எலும்புகளும் காணப்படுகின்றன. இவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார் மாணிக்கராஜ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago