முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியர்கள் துப்புரவு பணியில்  பங்கேற்றனர்

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர்.தா.கார்த்திகேயன் ஆலோசனையின் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதார கல்வித்துறை சார்பாக பள்ளிகள், கலைக் கல்லுhரிகள், தனியார் நிறுவனங்கள், குடிசைப்பகுதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கூடுமிடங்களில் நோய்த்தடுப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்டம் சார்பில் முழு சுகாதார சென்னையை உருவாக்க பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, இராயபுரம் மண்டலம், கோட்டம்-58க்குட்பட்ட நுஏமு சம்பத் சாலை, வேப்பேரியில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லுhரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நோய்த்தடுப்பு மற்றும் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

100 மணி நேரம்
முகாமில், நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் அவர்கள் நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்த போது """"சுகாதாரம் தான் எனக்கு சுதந்திரத்தை விட முக்கியமானதாகும். மேலும், ஒவ்வொரு இந்தியனும் தூய்மைக்காக வருடத்திற்கு 100 மணி நேரம், அதாவது வாரத்திற்கு 2 மணி நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் தன் வீடு, சுற்றுப்புறம், தான் பணிபுரியும் இடம் முதலிய இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற கூற்றுப்படியும், அவருடைய கனவினை நிறைவேற்றும் பொருட்டு, காந்தி பிறந்த தினமான 2014 அக்டோபர் 2ந் தேதியில் """"தூய்மை இந்தியா திட்டம்"" தொடங்கப்பட்டது. இதன்படி, காந்திஜியின் 150வது பிறந்த தினமான அக்டோபர் 2, 2019 ஆம் ஆண்டுக்குள் முழு சுகாதாரமான தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
மேலும், பன்றிக்காய்ச்சல் நோய் எவ்வாறு உருவாகிறது என்பது குறித்தும், முறையாக கை கழுவுவதினால் எவ்வாறு நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பது குறித்து காணொலி காட்சி மூலமாகவும், செயல்முறை விளக்கமாகவும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த 600 மாணவ, மாணவியர்கள் அனைவரும் வாரத்திற்கு 2 மணி நேரம் தூய்மைப்பணி செய்வதாகவும், தூய்மை இந்தியா உறுதிமொழியினையும் எடுத்துக் கொண்டனர்.உறுதிமொழிக்கு பின் மாணவ, மாணவியர்கள் அனைவரும் மாநகராட்சி பணியாளர்களுடன் சேர்ந்து கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரித்து அதனை மக்கும், மக்காத குப்பை என பிரித்து மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியின் மூலம் அப்புறப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் முனைவர்.டி.ஜி.சீனிவாசன் மாணவ, மாணவியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். மேலும், உதவி செயற் பொறியாளர், சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், கல்லூரி முதல்வர், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்