முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11,565 ஹெக்டர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன: கலெக்டர் தகவல்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேசுவரம்  இராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேலம் அகற்றும் பணிகள் குறித்து அனைத்து துறைகளை அதிகாரிகளின் ஆலோசணைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.நடராஜன்,தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில்   மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள 11.565 ஹெக்டர் பரப்பளவிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றப்பட்டுள்ளதாகவும், வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்திட முன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும்  செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதார்.
 
செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் மேலும் தெரிவித்தது:

 
 சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற உத்தரவின்படி  இராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 104947.03.5 ஹெக்டர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதில் தனியார் பட்டா நிலங்களில் 68657.97.5 ஹெக்டர் பரப்பளவிலும், அரசு நிலங்களில் மொத்தம் 36259.06.0 ஹெக்டர் பரப்பளவிலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதாக கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது.அதன் பேரில் இப்பகுதிகளில்  இதுவரை மொத்தம் 11565.82.5 ஹெக்டர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக பரப்பளவிலான சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை கண்மாய்கள், ஊராட்சிகளுக்குட்பட்ட கண்மாய்கள் பொது ஏலத்தில் கொண்டுவர உரிய விளம்பரம் செய்யப்பட்டு ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.அதுபோல நேரு யுவகேந்திரா போன்ற தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பெருமளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மூலமாக அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் சீமைக் கருவேல மரங்களின் தீமைகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டு தங்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களிடம் உறுதி மொழி பெறப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர் அடங்கிய விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் அரசு கேபிள் மூலமாகவும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுப்பணித்துறை, நகராட்சி, ஊராட்சிகள், பேரூராட்சிகள், வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NH) உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி முன்னேற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. இதுதவிர தனியார் பட்டா நிலங்களில் உள்ள கருவேல மரங்களை உடனடியாக அவரவர்களே அகற்ற வேண்டும் எனவும் அவ்வாறு அகற்ற தவறும் பட்சத்தில் அரசு செலவில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி அதற்குரிய செலவுத் தொகை இருமடங்காக பட்டா உரிமைதாரர்களிடம் வசூல் செய்து அரசு கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், அறிவிப்பு விளம்பரம் மற்றும் ஒவ்வொரு பட்டா உரிமைதாரர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு தனி நபர் பட்டா நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை துரிதமாக அகற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர்விநியோகம் செய்திட ஏதுவாக மொத்தம் ரூ.1531.77 இலட்சம் மதிப்பீட்டில் 1,061 பணிகள் செயல்படுத்த சிறப்பு திட்டம் தயார் செய்யப்பட்டு அவற்றில் இதுவரை ரூ.1010.490 இலட்சம் மதிப்பீட்டில் 831

பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. புதிதாக உறைக் கிணறுகள் வெட்டவும், பழைய கிணறுகளை ஆழப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி குடிநீர்; விநியோக குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்திட வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் முள்ளிமுனை, சின்ன ஏர்வாடி குடிநீர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்திட மத்திய உவரி ஆராய்ச்சி நிறுவன தொழில்நுட்ப அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உடனுக்குடன் சரிசெய்து வருகின்றனா;. இவ்விரு திட்டங்களும் இன்னும் இரு தினங்களில் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். காரங்காடு கிராமத்தில் 16 இலட்சம் மதிப்பில் கடல்நீரை குடிநீராக மாற்றம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணி இன்னும் ஒரு வார காலத்திற்குள் துவங்கப்படவுள்ளது. இவை தவிர 15 பெரிய ஊராட்சிகளில் உவரி நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்த  பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வறட்சி நிவாரண பணிகள், வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியாரின் (வேளாண்மை) பிரிவு நேர்முக உதவியாளர் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago