முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைப்பு சாரா ஓட்டுநர்கள் போலீசுக்கு உற்ற நண்பனாக செயல்பட வேண்டும் ஏ.டிஎஸ்.பி பேச்சு

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -வத்தலக்குண்டுவில் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் போலீசுக்கு உற்ற நண்பனாக செயல்பட வேண்டும் ஏ.டிஎஸ்.பி சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல¢துறை சார்பாக தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரியம் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் கருணாகரன் அனைவரையும் வரவேற்றார் ஏ.டிஎஸ்.பி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் பணிகள் பொதுமக்களுக்கு கொடுக்ககப்படும் சேவைகள் குறித்து பாராட்டி பேசினார். காவல்துறையும் பொதுமக்களும் நல்லுறணர்வுடன் செயல்படுவதற்கு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் பாலமாக செயல்பட வேண்டும் மேலும் அமைப்பு சாரா ஓட்டுநர்களான நீங்கள் போலீசாருக்கு உண்மையான நண்பாக செயல்படும் வேண்டும் என்று பேசினார். இம்முகாமில் தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா நல வாரிய சமூக பாதுகாப்பு திட்ட சாரிகா, டெல்லா, விருவீரு இன்ஸ்பெக்டர் சுகுமார், பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் மகேஷ¢ மற்றும் சார்பு ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வத்தலக்குண்டு கணேஷ்குமார், விராலிப்பட்டி நாகராஜன், எம்.வாடிப்பட்டி முருகன், கணவாய்பட்டி நவாஸ், அய்யம்பாளையம் ரவி, மாதவன், சோபனா ஆகியோர் கலந்து கொண்டார்கள், முகாமில் பாஸ்போர்ட் போட்டோக்களுடன் மனுக்கள் பெறப்பட்டது முகாமின் முடிவில் பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் மகேஷ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்