முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் முதன் முறையாக சீனாவை சேர்ந்தவர் மீது இனவெறி தாக்குதல்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்  - அமெரிக்காவில் முதன் முறையாக சீனாவைச் சேர்ந்த ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ள சம்பவம் சீனர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இனவெறி தாக்குதல்
புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் மீது இனவெறி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இனவெறி தாக்குதல்களில் இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் காயம் அடைந்தனர். ஆனால் முதன் முறையாக சீனாவைச் சேர்ந்த ஒருவர், இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அவரது பெயர் வாங் ஷென்ஸின் (68).

பெண் தாக்கு
இவர் நியூயார்க்கில் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் ஒரு அமெரிக்க பெண்ணும் பயணம் செய்தாள். அவள் வாங் தலையில் தான் வைத்திருந்த குடையால் பலமாக அடித்தாள். மேலும் அவர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கும் போது அவரை இடித்து கீழே தள்ளினாள். ஏன் இப்படி கொடூரமாக நடந்து கொள்கிறீர்கள் என்று அப்பெண்ணிடம் வாங் கேட்டார். அதற்கு அவர் எனக்கு சீனர்களை பிடிக்காது. அவர்களை வெறுக்கிறேன். நீங்கள் அமெரிக்காவை விட்டு உங்கள் நாட்டிற்கு செல்லுங்கள். உங்களுக்கு இங்கு இடம் இல்லை என ஆவேசமாக கூறினாள். இது வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆக பரவியது. இது அமெரிக்காவில் வாழும் சீனர்கள் மத்தியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்