முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகசாதனை படைத்த பாகுபலி-2 திரைப்பட டிரைலர் !

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      சினிமா
Image Unavailable

சென்னை  - கடந்த் 24 மணி நேரத்தில் யூடியூபில் பாகுபலி 2 டிரைலரை 5 கோடி ரசிகர்கள் பார்த்து உள்ளனர். இதன் மூலம் இந்த படத்தின் டிரைலரை  அதிகம் பார்த்தவர்களில் உலக சாதனை படைத்துள்ளது.

2-ம் பாகம்
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமவுலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இணையத்தில் கசிந்தது
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மார்ச் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு இணையத்தில் டிரைலர் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால், தமிழ் டிரைலர் மட்டும் இணையத்தில் கசிந்தது. இதனை வாட்ஸ் - அப் மற்றும் சமூகவலைத்தளத்தில் அனைவரும் பகிர்ந்து வந்தார்கள்.

5 கோடி ரசிகர்கள்
இதனைத் தொடர்ந்து  அதிகாரப்பூர்வமாக அனைத்து மொழி டிரைலர்களையும் படக்குழு யூடியூபில் நேற்று முன்தினம் வெளியிட்டது . யூடியூபில் 24 மணி நேரத்தில் 5 கோடி ரசிகர்கள் பாகுபலி 2 டிரைலரை பார்த்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்