முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் குடிநீர் வினியோக திட்ட பணிகள்:கலெக்டர் சி.கதிரவன் நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கெலமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் வினியோக திட்ட பணிகள் குறித்து பேரூராட்சி அலுவலர்கள், ஓகேனக்கல் குடிநீர் திட்ட அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரிய அலுவலர்கள் ஆகியோருடன் குடிநீர் திட்ட பணிகள் குறித்து கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார். கெலமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் குடிநீர் தங்கு தடையின்றி வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தற்போது கெலமங்கலம் பேரூராட்சிக்கு ஓகேனக்கல் குடிநீர் திட்டம் மூலம் 6.5 லட்சம் லிட்டர் குடிநீரும், உள்ளுர் பகுதியில் நீர் ஆதாரத்தை கொண்டு 5.21. லட்சம் லிட்டர் குடிநீர் என மொத்தம் ஒரு நாளைக்கு 11.78 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சனத்குமார் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள நீர் உறுஞ்சும் கிணற்றை நேரில் பார்வையிட்ட கலெக்டர் அவர்கள் , 2 லட்சம் மதிப்பீட்டில் கிணற்றை தூர் வாரி ஆழப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்யவும், சனத்குமார் நதியில் அமைந்துள்ள குடிநீர் கிணற்றின் குறுகே 2 தடுப்பணைக்களை கட்ட மதிப்பீடு தயார் செய்ய பேரூராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நாட்றாம்பாளையம் கிராமத்தில் ரூ.12.20 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர்கொள்ளவு கொண்ட புதிய தரை மட்ட நீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த நீர் தேக்க தொட்டிலிருந்து அருகாமையில் உள்ள 10 மலை கிராம மக்கள் சுமார் 3600 பேர் பயன் பெறும் வகையில் இந்த நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என கலெக்டர் அவர்கள் உத்தரவிட்டார். இவ்வாய்வின் போது, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மரிய எல்சி, பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் ஆர்.நடேசன், ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சாம்கிங்ஸ்டன், ஓகேனக்கல் குடிநீர் திட்ட பொறியாளர்கள் பன்னீர் செல்வம், ராஜா, உதவி செயற்பொறியாளர் பாரி, உதவி பொறியாளர் ராஜா, பேரூராட்சி உதவி பொறியாளர் ராஜேந்திரன், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்