மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கள விளம்பரத்துறை வேலூர் மக்கள் நல திட்டங்கள் சிறப்பு விழிப்புணர்வு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை காட்பாடி ஒன்றியம் சேனூர் கிராமத்தில் 15.03.2017 ஏற்பாடு செய்து இருந்தது நிகழ்ச்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் கே.எஸ்.யுவராஜ் தலைமைதாங்கி துவக்கி வைத்தார் விழாவில் மக்கள் நிதி திட்டம், தூய்மை பாரதம், பிரதம மந்திரியின் விபத்து காப்பீடு, பிரதம மந்திரியின் ஆயுள் காப்பீடு, பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தைக்கு கற்பிப்போம் ஆகிய திட்டங்களை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மாவட்ட கள விளம்பர உதவி அலுவலர் மு.ஜெயகணேஷ் வரவேற்புரையற்றினர் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உமா சங்கர் கலந்து கொண்டு பேசுகையில் இப்போது பணம்மில்லா பரிவர்த்தனையை அனைவரும் பின்பற்ற வேண்டும் மேலும் மக்கள் அனைவரும் மிகவும் விழிப்புணர்வோடு செயல் பட வேண்டும் தொலைபேசியில் வரும் தேவையில்லாத வங்கி சம்பதமான எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டாம் என்றும் இந்த நிகழ்ச்சி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி பொது மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட கருத்துக்களை பின்பற்றி பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர் கே.எஸ்.டி.சுரேஷ் பேசுகையில் ஒன்பது மாதம் முதல் பதினைந்து வயதுடையவர்கள் கட்டாயம் இந்த எம் ஆர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் போடாமல் விட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போட்டுக் கொண்டு ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்புதுச்சேரி கள விளம்பர உதவி இயக்குனர் டாக்டர்.சிவகுமார் தலைமையுரையாற்றுகையில் பெண்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்ளாமல் தன்னுடைய குடும்ப நலனில் மட்டுமே கவனத்தை செலுத்துகின்றனர் இதுவே தாய்மார்கள் ஆரோக்கியம் குறைவிற்கு காரணம் எனவே அனைவரும் இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து அனைவரும் தன் ஆரோக்கியம் பற்றி அக்கறை காட்டவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.நிகழ்ச்சயில் துணை இயக்குனர் (காசநோய் பிரிவு) வேலூர் டாக்டர்.ராஜாசிவானந்தம் பேசுகையில் மக்கள் அனைவரும் நமது பாரம்பரிய நல்ல சத்துமிக்க உணவினை கட்டாயம் உட்கொள்ள வேண்டும் என்றும் இந்த பாஸ்ட் பூட் மற்றும் லேஸ் குர் குரே போன்ற தீங்கு மிக்க உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரன்வ வேலூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் விஜயா, தமிழ்நாடு சித்த வைத்திய மகா சங்கத் தலைவர் அருஜுனன், எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரி அனந்தன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.வசந்தி ஆனந்தன், இந்தியன் வங்கி நிதி ஆலோசகர் சௌந்தராஜன் , உதவி அஞ்சலக கோட்ட கண்கணிப்பாளர் மகேந்திரன் அஞ்சலக ஆய்வாளர் ஹேமா பாரதி மற்றும் புதுச்சேரி கள விளம்பர உதவியாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக மக்கள் நல திட்டங்கள் சிறப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்தை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர் கே.எஸ்.டி.சுரேஷ் கொடியசைத்து துவங்கிவைத்தார் ஊர்வலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி பெண்கள் கலந்துக்கொண்டனர், நிகழ்ச்சயில் புகைப்பட கண்காட்சி,விழிப்புணர்வு திரைப்படம், கலைநிகழ்ச்சிகள்,ஆரோக்கிய குழந்தைகள் போட்டி மற்றும் விழிப்புணர்வு விநாடி வினா நடைபெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது முன்னதாக 13.03.2017 அம்முண்டி, கார்ணம்பட்டு, 14.03.2017 வண்டறந்தாங்கள், சேர்க்காடு கிராமங்களில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சியில் வினாடி வினா விழிப்புணர்வு திரைப்படம் மற்றும் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: