முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஜீலானி மீண்டும் வீட்டுச் சிறையில் அடைப்பு

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்  - காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்று போராடிவரும் பிரிவினைவாத இயக்கத்தின் மூத்த தலைவர்கள் மிர்வாய்ஸ், ஜீலானி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு விடுவிக்கப்பட்டு நேற்று மீண்டும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போராட்டம்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் தீவிரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

தேர்தலை புறக்கணிக்க ...
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்வதற்காக பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஹூரியத் மாநாட்டு கட்சியின் இரு பிரிவுகளை சேர்ந்த தலைவர்களான சையத் அலி ஷா ஜீலானி மற்றும் மிர்வாய்ஸ் உமர் பாரூக் ஆகியோர் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தனர்.

தடுத்து நிறுத்தம்
ஆனால், சையத் அலி ஷா ஜீலானி நடைபெறவிருந்த அந்த பேட்டியை போலீசார் தடை செய்து விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீநகர் விமான நிலையம் அருகேயுள்ள ஹைதர்போரா பகுதி வழியாக நேற்று முன்தினம் பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து பட்காம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

வீட்டுக் காவல்
நேற்று முன்தினம் பின்னிரவு விடுதலை செய்யப்பட்ட அவர்கள் இருவரும் நேற்று காலை முதல் போலீசார் வீட்டுக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அவர்கள் வெளியே சென்று ஜூம்மா தொழுகையின்போது மக்களிடையே நச்சு கருத்துகளை விதைக்காமல் இருப்பதற்காக இந்த வீட்டுக் காவல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்